நோர்வேயிலை மலை, முகடு, உச்சி என்று ஓடிப் பயிற்சிசெய்து, «மலை உச்சி ஓட்டம்» எனும் அதிகம் அறியப்படாத – SKYULTRA World Champion 2026 இல் முதல் இடம் வென்ற ஒரு தமிழ் மகளை அறிவீர்களா, நீங்கள்? அவர்தான் சங்கவி பாலேந்திரன்.
சிறு வயதிலேயே தனது தந்தையின் ஊக்கத்தில் ஓட்டப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்று வந்தவர், 2013இல் தனது 18வது வயதில் தந்தையை இழக்கிறார். தகப்பனாரின் இழப்பிலிருந்து தன்னைத் தேற்றிக்கொள்ள அவர் தெரிந்த வழி இயற்கையுடன் ஒன்றி ஓட்டப்பயிற்சிகளில் ஈடுபடுவது. அதுவே காலப்போக்கில் மலை உச்சி ஓட்டங்களில் அவரை ஈடுபடவைத்தது. 2015 இல் ஐரோப்பியப் போட்டியில் முதற்பரிசையும் இவர் வென்றுள்ளார்.
தமிழர் மூவர் அமைப்பானது விருதுவழங்கலில், இவ்வாண்டு முதல் நோர்வேத் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருகிறது. தமிழ்ச் சங்கத்தின் நேற்றைய 47வது ஆண்டுவிழாவில் முன்மாதிரியாகத் திகழ்கின்றமைக்கான தமிழர் மூவர் | நோர்வே – 2026 விருதுகள் வழங்கப் பட்டன. ஆண்டுவிழாவில் கலந்துகொண்ட பலரும் இந்த வீராங்கனையைப் பற்றி அறிந்திருக்கவில்லையே என வியந்துகொண்டனர்.
வட நோர்வேயில் மருத்துவராகவும் பணிபரிந்து வருகின்ற சங்கவி பாலேந்திரனை விருதாளர்களில் ஒருவராகத் தெரிந்தமைக்கான காரணத்தை ஐவர் அடங்கலான தமிழர் மூவர் | நோர்வே – 2026 சுயாதீனத் தெரிவுக்குழுவானது பின்வருமாறு தெரிவித்திருந்தது:
வேலை, அன்றாட வாழ்வுச் சுமைகளுக்கு நடுவில் உடற்பயிற்சி செய்யவே நம்மிற் பலர் தடுமாறும் சூழலில்,Kabelvåg பகுதியில் மருத்துவராகவும் அவசர சிகிச்சைப் பிரிவுப் பொறுப்பாளராகவும் பணியாற்றுவதுடன்,உயர்மட்ட விளையாட்டு வீராங்கனையாகவும் சாதித்து வருகிறார் எமது அடுத்த விருதாளர். இவர் பங்கேற்பது சாதாரண ஓட்டப் போட்டிகளில் அல்ல. 50 முதல் 99 கி.மீ தூரமும் 3000 மீட்டர் உயரமும் கொண்ட கடினமான ‘Sky Ultra’ மலை ஓட்டப்போட்டியில் பங்கேற்கும் இவர், 2025-இல் ஐரோப்பியச் சாம்பியனாகவும் இந்த ஆண்டு உலகச் சாம்பியனாகவும் வெற்றி பெற்றுள்ளார்!
மேலும், Kenyaவில் பெண்கள் அதிகம் உடற்பயிற்சி செய்ய உதவும் ஒரு திட்டத்திலும் பங்களித்து வருகிறார். மருத்துவப் பணியுடன் உயர்மட்ட விளையாட்டையும் இணைக்கும் அபூர்வ சாதனையாளரான Shangavi Balendran ‘தமிழர் மூவர்’ விருது மூலம் மதிப்பளிக்கப்படுகின்றார். அசாதாரண திறமையும் ஆற்றலும் கொண்டவர் Shangavi Balendran. அவரை மலைசிகரங்களை நோக்கித் தொடர்ந்து செலுத்தும் உந்துதல் எது என்பதை இந்தக் காணொளியில் கேட்போம்!
Weniger anzeigen
