கஸ்ஸப்ப தேரரின் போராட்டத் தோல்வியால் கஸ்ஸப்ப தேரர், சரத் வீரசேகர, தேசிய எதிர்க்கட்சிகள் கவலை கொண்டதைவிட தமிழ் பிரதேசத்திலிருந்து செயற்படும் சிலரும், புலம்பெயர் சிலரும், அமைப்புகளும் மிகவும் கவலை கொள்கிறார்களென தெரிவித்துள்ளார் தேசிய மக்கள் சக்தியின் வடக்கின் பிரபலம் கபிலன் சுந்தரமூர்த்தி.
நாட்டின் வரலாற்றில் எத்தனை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறோம் என்பது பலரது, குறிப்பாக மக்களது மனச்சாட்சிக்கு புரிகிறது என நம்புகிறோம். தற்போது இனவாதிகள் ஏவிய இறுதியாயுதமும் கேள்விக்குறியாகியுள்ளது.
ஆனால் எமது பிரதேத்தில் இன்னமும் சிலர் கஸ்ஸப்ப தேரர் போன்றோரின் அமைப்புகளின் சில போராட்டத்தை வலுவூட்டப் பகீரத பிரயத்தனம் எடுக்கிறார்கள். அவை தொடர்பிலான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்று வருகின்றது. தேசிய மக்கள் சக்தி இதயசுத்தியுடன் செயற்படுகிறது. எமது மக்கள் எம்மைப் புரிந்துகொள்ளுவார்கள் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் கபிலன் சுந்தரமூர்த்தி.
