அமெரிக்க இராணுவத் தளங்களைக் கண்காணிக்க ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) ஒரு சீன இராணுவ செயற்கைக்கோளைப் பயன்படுத்தியதாக ஃபைனான்சியல் டைம்ஸ் (FT) புதன்கிழமை செய்தி வெளியிட்டது.
ஈரான் வரலாறு
ஈரானிய இராணுவ ஆவணங்களை மேற்கோள் காட்டிய ஃபைனான்சியல் டைம்ஸ் 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் IRGC இரகசியமாக TEE-01B உளவு செயற்கைக்கோளைப் பெற்றதாகக் கூறியது. இந்தச் செயற்கைக்கோள் சீன நிறுவனமான எர்த் ஐ கோ (Earth Eye Co.) ஆல் தயாரிக்கப்பட்டது.
செயற்கைக்கோள் தொடர்பான தரைவழி உள்கட்டமைப்பிற்குப் பொறுப்பான சீன நிறுவனமான எம்போசாட்டுடன் ஐ.ஆர்.ஜி.சி. ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது என்று ஃபைனான்சியல் டைம்ஸ் கூறியது.
சவூதி அரேபியா, ஜோர்டான், பஹ்ரைன் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களுக்கு உள்ளேயும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் செயற்கைக்கோள் படங்களை எடுத்ததாக அந்த அறிக்கை தெரிவித்தது. அந்தப் படங்கள் எடுக்கப்பட்ட நிகழ்வானது, அந்த இராணுவத் தளங்கள் மீது ஐ.ஆர்.ஜி.சி நடத்திய தாக்குதல்களின் நேரத்துடன் ஒத்துப்போனது.
ஃபைனான்சியல் டைமின் இச்செய்திக்கு வாஷிங்டன் டி.சி-யில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகம், சீனாவைப் பற்றி ஊகமான மற்றும் மறைமுகத் தவறான தகவல்களைப் பரப்புவதை நாங்கள் உறுதியாக எதிர்க்கிறோம் என்று கூறியது.
ஈரானுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளை சீனா வழங்கினால், அது பெரும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் முன்னதாகவே எச்சரித்திருந்தார்.