யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் கைதில் இருந்து தப்பிக்க கையில் இருந்த
ஹெரோயின் பொட்டலத்தை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில் , யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
சுழிபுரம் பகுதியில் இளைஞன் ஒருவர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்
பொலிசாரை கண்டதும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த இளைஞன் அதனை வாய்க்குள் போட்டு விழுங்கியுள்ளார்.
அதனை அவதானித்த பொலிஸார் துரிதமாக செயற்பட்டு , மற்றைய பொட்டலம் ஒன்றை மீட்டதுடன் , இளைஞனை கைது செய்து யாழ் . போதனா தைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் இளைஞன் சிகிச்சை பெற்று வரும் நிலையில் , இளைஞனிடம் போதைப்பொருளை வாங்கியவர்கள், அவருக்கு போதைப்பொருளை வழங்கியவர்கள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
