லண்டனில் வாழ்ந்து வரும் சிறிதர் – சாந்தா தம்பதியினர், தங்களது 35-வது திருமண நாளைப் பிள்ளைகள், சகோதரர்கள், உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து மிகச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.
இத்தம்பதியினர் எல்லா வளமும் நலமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறோம்! இனிய திருமண நாள் வாழ்த்துகள்!
(சிறிதர் தன்வாழ்கை பற்றிய நினைவுப்பகிர்வு)
முப்பத்தைந்து வருடங்கள்… ஆயிரம் நிலவுகளைக் கடந்து வந்திருக்கிறோம், அத்தனைக் காலமும் என் நிழலாய் நீயே என்னுடன் நடந்திருக்கிறாய்! வாழ்க்கை எனும் பெரும் கடலில் வலை துணையாக நீ இருக்க, ஒவ்வொரு நாளும் எனக்குள் வசந்தம் மட்டுமே பூத்திருக்கிறது!
என் இல்லத்தின் விளக்காகி வந்தவளே… நமக்கென்று ஒரு நந்தவனம் படைத்தாய்! பெண்ணென்று ஒரு மகள் ,ஆணென்று ஒரு மகன் என இரு செல்வங்களை மடியில் தந்து, நம் பாரம்பர்யத்தின் வேர்களை அழகாய் நீயே நட்டு வைத்தாய்! அவர்களை வளர்த்து ஆளாக்கிய பெருமையில், பாதிக்கும் மேல் உன் தியாகம் அல்லவா இருக்கிறது!
இளமை கடந்திருக்கலாம், முகத்தில் சுருக்கங்கள் விழுந்திருக்கலாம்… ஆனால், அன்று நீ தந்த அதே அன்பு, இன்றும் உன் விழிகளில் குறையாமல் வாழ்கிறது! நெற்றியில் சூடும் குங்குமம் போல, என் நெஞ்சில் என்றும் நிறைந்திருப்பவள் நீ!
இத்தனை வருடங்கள் என்னைத் தாங்கியவளே… இனிவரும் காலங்களிலும் உன் கைகோர்த்து, அதே அன்போடு, அதே காதலோடு வாழ்வதொன்றே என் வாழ்நாளின் வரம்!
முப்பத்தைந்து ஆண்டுகளாய் என் வாழ்வை அழகாக்கிய என் அன்பு மனைவிக்கு, இதயப்பூர்வமான நன்றிகளும் காதலும்!

