கண்ணே நீயும் தூக்கம்மா…
நல்ல காலம் கனியும்!
எண்ணம் போல வாழவே
நல்ல வேளை பிறக்கும்!
உறவுகள் உன்வசம்
உள்ளன்பினைப் பொழிந்திடும்!
உள்ளங்கள் இணைந்திட்டால்
உலகமே நம்வசம்!
உயர்ந்த வாழ்வில் பணிவு வேண்டும்,
உலகம் உன்னைப்போற்ற வேண்டும்!
(கண்ணே நீயும் தூக்கம்மா…)
நாலுபேர் கூறும் வார்த்தை
நாளும் கேட்டு வாழ வேண்டும்!
நாளை உலகில் சிறந்து வாழ
நல்லோர் ஆசி உனக்கு வேண்டும்!
உயர்ந்த வாழ்வில் பணிவு வேண்டும்,
உலகம் உன்னைப்போற்ற வேண்டும்!
(கண்ணே நீயும் தூக்கம்மா…)
இறைவன் தந்த இந்த வாழ்வில்
பரிவுகொண்ட எண்ணம் வேண்டும்!
எளிமை வாழ்க்கை நிலையைப் பேணி
என்றும் சிறந்து வாழ வேண்டும்!
உயர்ந்த வாழ்வில் பணிவு வேண்டும்,
உலகம் உன்னைப்போற்ற வேண்டும்!
(கண்ணே நீயும் தூக்கம்மா…)
ஆக்கம் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா (12.07.2026)
