வடக்கு இத்தாலியின் ட்ரைஸ்டே நகரில் உள்ள பியாஸ்ஸா யூனிட்டா டி’இத்தாலியா சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று பரபரப்பான காட்சிகள் அரங்கேறின. ஓட்டுநர் உள்ளே இருந்த நிலையில் ஒரு கார் கடலுக்குள் கவிழ்ந்தது.
மொடெனா இராணுவ அகாதமியைச் சேர்ந்த பல புதிய வீரர்கள் அந்த விபத்தைக் கண்டு, தயக்கமின்றி செயல்பட்டனர். அவர்கள் தண்ணீரில் குதித்து, அந்த நபரை அடைந்து, அவரைப் பாதுகாப்பாக மீட்டனர்.
இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. அந்த காணொளியில், வாகனம் தண்ணீரில் மிதப்பதும், மீட்புப் படையினர் ஓட்டுநரை நோக்கி நீந்திச் செல்வதும் தெரிகிறது.
கார் ஏன் தண்ணீரில் மூழ்கியது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
