மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்ந்து வரும் நிலையில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அவசர சந்திப்பைக் கோரியுள்ளது.
உலகச் சந்தையில் டீசல் விலை 45 சதவீதமும், பெட்ரோல் விலை 30 சதவீதமும் அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள சி.பி.சி தலைவர் டி.ஜே. ராஜகருண, தற்போதைய விலையில் நாட்டில் எரிபொருளை விற்பனை செய்வது கடினமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வறட்சி காரணமாக நீர்மின் உற்பத்தி குறைந்து, மின்சார உற்பத்திக்காக மேலதிக எரிபொருளைப் பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் எரிபொருள் நுகர்வைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
