சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, மஹாரா சிறையைச் சுற்றியுள்ள பகுதியில் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் (SDIG) சஜீவ மெடவத்த அறிவித்துள்ளார்.
சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் ஒரு கைதி உயிரிழந்ததாலும், பலர் காயமடைந்ததாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறையைச் சுற்றி பொலிஸ், சிறப்பு அதிரடிப் படை (STF) மற்றும் ஆயுதப் படைகள் குவிக்கப்பட்டு, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
