ஈரான் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தி இலக்குகளைக் கட்டுப்படுத்தி, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான உடன்படிக்கை விரைவில் எட்டப்படும் வரை இந்த தாக்குதல்கள் நிறுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் ட்ரூத் பக்கத்தில் பதிவிட்ட அவர், நீரிணையை உடனடியாக, முழுமையாக மீண்டும் திறப்பதற்கும், ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் வழிவகுக்கும் உடன்படிக்கை ஒன்றை கொண்டுவர ஈரானும் பிற மத்திய கிழக்கு நாடுகளும் அவகாசம் கோரியதாகவும், இந்தக் கோரிக்கையின் அடிப்படையில் தாக்குதல்களை நிறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
