கனடாவுடனான வர்த்தகப் போரைத் தீர்ப்பது குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதற்காக ஒரு ஒப்பந்தம் “மிக விரைவில்” ஏற்படக்கூடும் என்று டிரம்ப் குறிபிட்டுள்ளார்.
இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையே முறையான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கப்பட்டதா என்பது குறித்த விவரங்களை அவர் அளிக்கவில்லை.
டப்ளினில் அயர்லாந்து பிரதமர் மைக்கேல் மார்ட்டினுடன் நடைபெற்ற சந்திப்பின்போது, அமெரிக்கா-மெக்சிகோ-கனடா வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்காவை வெளியேற்றத் திட்டமிட்டுள்ளீர்களா என்று டிரம்ப்பிடம் கேட்கப்பட்டது.
அந்தக் கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்காமல் தவிர்த்த டிரம்ப், வாஷிங்டனுடன் (அமெரிக்காவுடன்) ஒரு ஒப்பந்தத்தை எட்ட கனடா விரும்புவதாகவும், அமெரிக்க விவசாயிகளுக்குச் சாதகமான சிறந்த நிபந்தனைகளைத் தான் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான மோதல் வர்த்தக வரிகளைத் தாண்டி விரிவடைந்துள்ளது; இது வாகன உற்பத்தி போன்ற முக்கியத் தொழில்கள் சார்ந்திருக்கும் எல்லை தாண்டிய விநியோகச் சங்கிலிகளைச் சிதைக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
