இலங்கை மற்றும் தாய்லாந்து இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.
பாங்கொக்கில் நடைபெற்ற உயர்மட்ட சந்திப்பில், இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் தாய்லாந்தின் பதில் வெளிவிவகார அமைச்சர் சரண் சரோஎன்சுவான் ஆகியோர் இதுகுறித்து கலந்துரையாடியுள்ளனர்.
சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான விசா விலக்கு நடைமுறையை விரைவுபடுத்துவது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டதுடன், வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, தொழிலாளர் இடப்பெயர்வு, கல்வி, கடல்சார் பாதுகாப்பு மற்றும் கலாசார பரிமாற்றம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
