ஈரானிய வணிக இணையதள முகவரிகளை அமெரிக்கா முடக்குவது நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தைச் சிதைக்கும் செயல் என ஈரான் தேசிய சைபர்ஸ்பேஸ் மையம் குற்றம் சாட்டியுள்ளது. இந்தநிலையில் .com மற்றும் .io முகவரிகள் முடக்கப்பட்டதால் நிறுவனங்கள் உள்நாட்டு .ir முகவரிகளுக்கு மாறியுள்ளன. இராணுவ மோதல்களுக்கு இணையாக டிஜிட்டல் போரும் தீவிரமடைந்துள்ளதை இது காட்டுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
