புத்தளம், உடப்பு, கொத்தாந்தீவு பகுதியில் நேற்று (31) காலை கிணற்றில் விழுந்து குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. தனது வீட்டின் முன்புள்ள கிணற்றில் விழுந்தே குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குழந்தையை உடனடியாக கொத்தாந்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்னர்.
