முன்மொழியப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தில் பச்சைக் குத்துதல், உடல் அடையாளங்கள் மற்றும் வழக்குத் தகவல்களை வெளியிட நீதிமன்ற அனுமதி பெறல் தொடர்பான விதிகள் நீக்கப்படவுள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் நாடாளுமன்றக் குழுநிலை விவாதத்தின் போது இத்திருத்தங்கள் முன்வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
