தனது உத்தரவின் கீழ் கொலைகளை அரங்கேற்றிய இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகளை காட்டிக்கொடுக்க முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய தயாராகியிருப்பதாக தென்னிலங்கையில் சர்ச்சைகள் மூண்டுள்ளது.
அரசியல் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோரின் கடத்தல் மற்றும் காணாமல் போதல் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, வழக்கு தொடர்பாக இணையவழியில் சாட்சியம் அளித்திருந்தார்.
ஊடகவியலாளர் ஒருவர் மீதான கொலை முயற்சியில் இராணுவத்தின் திரிப்போலி குழுவைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டமை தொடர்பில் தனக்குத் தெரியாது.
களத்தில் நடந்த எந்த நடவடிக்கைகளிலும் நான் ஈடுபடவில்லை. பாதுகாப்புச் செயலாளர் என்ற முறையில், அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்ட தகவல்களை அந்த நிறுவனங்களுக்கு அனுப்புவதே எனது கடமையாக இருந்தது. களத்தில் நடக்கும் நடவடிக்கைகளில் நான் நேரடியாக ஈடுபடவில்லையென கோத்தபாய தெரிவித்துள்ளார்.
மேஜர் ஜெனரல் ஹெந்தவிதாரனவிடம் தகவல்கள் வழங்கியமை வெகு காலத்திற்கு முன்பு நடந்தது. அதனால்தான் இப்போது எனக்கு அது நினைவில் இல்லையெனவும் கோத்தபாய தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தனது உத்தரவின் கீழ் கொலைகளை அரங்கேற்றிய இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகளை காட்டிக்கொடுக்க முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய தயாராகியிருப்பதாக விமர்சனங்கள் மூண்டுள்ளது.
