சவூதியில் ஹூதிகளின் தாக்குதல்கள் மற்றும் வான் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் படம்பிடித்த அமெரிக்கக் குடிமக்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. தாக்குதல் பகுதிகளைப் படம்பிடிப்பதும் சமூக வலைதளங்களில் பகிர்வதும் சவூதி சட்டப்படி குற்றமாகும் எனக் குறிப்பிட்டுள்ள தூதரகம், அங்குள்ள தனது குடிமக்களுக்கு அவசரப் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
