“கற்சிலையை உடைக்க முடியும்; ஆனால் தமிழர்களின் நெஞ்சத்தில் உள்ள உருவத்தை உடைக்க முடியாது!” என திரைப்பட இயக்குநர் டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலை அகற்றப்பட்டமை தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், திலீபன் தமிழர்களின் நினைவிலும் நெஞ்சிலும் பதித்துள்ள இடத்தை எந்தச் செயலாலும் அழிக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் முன்வைத்த ஐந்து அம்சக் கோரிக்கைகள் தமிழ் மக்களின் நினைவில் தொடர்ந்து நிலைத்திருக்கும் என்றும், சிலை அகற்றப்பட்டாலும் ஒரு தலைமுறையின் நினைவையும் உணர்வையும் அகற்ற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“சிலை உடையலாம்…
நினைவு உடையாது!
உருவம் மறையலாம்…
வரலாறு மறையாது!” ![]()
