தமிழ்ச்செல்வன் வாழ்வில் அதிகம் பேசப்படாத சுவாரஷ்யங்கள் ஒரு புன்னகை…..
தமிழ்ச்செல்வன் வாழ்வில் அதிகம் பேசப்படாத சுவாரஷ்யங்கள் ஒரு புன்னகை…..
கையில் ஊன்றுகோல்…
அருகில் மொழிபெயர்ப்பாளர்…
சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த அரசியல் முகம்!
அரசியல் பிரிவு தலைவராக அறியப்பட்ட எஸ்.பி. தமிழ்ச்செல்வன், வெறுமனே ஓர் அரசியல் பேச்சாளராக மட்டும் இருக்கவில்லை.
அவரது இளமை காலம், போர் கள அனுபவங்கள், குடும்ப வாழ்க்கை மற்றும் சர்வதேச தொடர்புகள் என பல சுவாரஷ்யமான அம்சங்கள் அவரது வாழ்க்கையில் இடம்பெற்றிருந்தன.
2007 நவம்பரில் அவர் உயிரி ழந்ததைத் தொடர்ந்து, The Guardian, The Independen மற்றும் The Washington Post ஆகிய சர்வதேச ஊடகங்கள் அவரது வாழ்க்கையை பற்றிய விரிவான கட்டுரைகளை வெளியிட்டன. அவற்றில் பதிவான சில குறிப்பிடத்தக்க தகவல்கள் இதோ.
1. முடிதிருத்தும் தொழிலுக்கு பயிற்சி பெற்ற இளைஞர்
அரசியல் பேச்சுவார்த்தைகளில் சர்வதேச அளவில் அறியப்பட்ட தமிழ்ச்செல்வன், இளமை காலத்தில் முடிதிருத்தும் தொழிலுக்கு பயிற்சி பெற்றிருந்தார்.
பின்னர் 1983ஆம் ஆண்டு இயக்கத்தில் இணைந்து அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவராக உயர்ந்தார்.
ஒரு சாதாரண தொழிலுக்கு பயிற்சி பெற்ற இளைஞனின் வாழ்க்கை, பின்னர் இலங்கையின் உள்நாட்டு போரின் முக்கிய வரலாற்று பகுதியாக மாறியது.
# 2. ‘தினேஷ்’ என்ற பெயரிலும் அறியப்பட்டவர்
தமிழ்ச்செல்வன் ஆரம்பகால போராட்ட வாழ்க்கையில் ‘தினேஷ்’ என்ற பெயரைப பயன்படுத்தியதாக வாழ்க்கை வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. அமைப்புகளின் உறுப்பினர்கள் தனிப்பட்ட பெயர்களுக்கு பதிலாக வேறு பெயர்களை பயன்படுத்திய கால கட்டத்தின் ஒரு பகுதியாக இது அமைந்தது.
3. மெய்ப்பாதுகாவலராக இருந்தவர்
தமிழ்ச்செல்வன் ஆரம்ப காலத்தில் தலைவரின் மெய் பாதுகாவலராக பணியாற்றியதாக The Guardian மற்றும் The Independent குறிப்பிட்டுள்ளன.
பின்னர் அவர் யாழ்ப்பாண பிராந்தியத்தில் இரா ணுவ பொறுப்புகளை ஏற்று, தொடர்ந்து அரசியல் பிரிவின் தலைமை பொறுப்புக்கு முன்னேறினார்.
இந்தப் பயணம், அமைப்பின் இரா ணுவ பிரிவில் இருந்து அரசியல் தலைமையை நோக்கி அவர் நகர்ந்த விதத்தை வெளிப்படுத்துகிறது.
4. ஒரு காயம் அவரது வாழ்க்கையின் திசையை மாற்றியது
1993ஆம் ஆண்டு பூநகரி பகுதியில் இடம்பெற்ற மோதலின்போது தமிழ்ச்செல்வன் கடுமையான கால் காயத்துக்கு உள்ளானார்.
அந்த காயம் அவரது நடமாட்டத்தை நிரந்தரமாக பாதித்ததாக சர்வதேச ஊடகங்கள் பதிவு செய்துள்ளன.
அதன் பின்னர் அவர் கையில் ஊன்றுகோலுடன் பொதுநிகழ்வுகளிலும் ஊடக சந்திப்புகளிலும் தோன்றினார்.
கால போக்கில் அந்த ஊன்றுகோல் அவரது பொதுவான தோற்றத்தின் அடையாளமாக மாறியது.
5. ஆங்கிலம் பேசாதவராக இருந்தும் சர்வதேச ஊடகங்களின் முக்கிய பேச்சாளர்
சர்வதேச தொடர்புகளுக்கு பொறுப்பான அன்ரன் பாலசிங்கத்தின் உடல் நிலை பாதிக்கப்பட்ட பின்னர், தமிழ்ச்செல்வனின் பங்கு அதிகரித்தது.
2006ஆம் ஆண்டு பாலசிங்கம் உயிரிழந்ததை தொடர்ந்து, வெளிநாட்டு பிரதிநிதிகளும் செய்தியாளர்களும் தொடர்புகொண்ட முக்கிய நபராக தமிழ்ச்செல்வன் விளங்கினார்.
அவர் ஆங்கிலத்தில் பேசுவதற்கு பதிலாக மொழிபெயர்ப்பாளரின் உதவியை பயன்படுத்தினார். இருப்பினும், சர்வதேச செய்தியாளர் சந்திப்புகளிலும் சமாதான பேச்சுவார்த்தைகளிலும் அமைப்பின் கருத்துகளை வெளிப்படுத்திய முக்கிய முகமாக இருந்தார்.
6. குடும்ப வாழ்க்கையை பற்றிய தகவல்கள்
தமிழ்ச்செல்வனின் மனைவி சசிரேகாவும் அமைப்பின் பெண்கள் பிரிவுடன் தொடர்புடையவராக இருந்ததாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. அவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருந்தனர்.
2007ஆம் ஆண்டு தமிழ்ச்செல்வன் உயிரிழந்தபோது, அவரது மகளுக்கு எட்டு வயதும் மகனுக்கு நான்கு வயதும் இருந்ததாக The Guardian வெளியிட்ட இரங்கல் கட்டுரை தெரிவித்தது.
அரசியல் மற்றும் போர் செய்திகளில் அடிக்கடி இடம்பெற்ற அவரது பெயருக்கு அப்பால், இரண்டு சிறிய பிள்ளைகளின் தந்தையாகவும் அவர் இருந்தார் என்பதை காட்டும் தகவலாக இது அமைந்தது.
7. 2001ஆம் ஆண்டு உயிர் தப்பியவர்
தமிழ்ச்செல்வன் 2001ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியுடன் தொடர்புடைய முயற்சியில் இருந்து உயிர் தப்பியதாக The Independent குறிப்பிட்டுள்ளது.
அதற்கு பின்னரும் அவர் அரசியல் நடவடிக்கைகளிலும் வெளிநாட்டு பிரதிநிதிகளுடனான சந்திப்புகளிலும் தொடர்ந்து ஈடுபட்டார்.
ஆனால் 2007 நவம்பர் 2ஆம் திகதி கிளிநொச்சி பகுதியில் நடத்தப்பட்ட விமான. தாக் கு தலில் அவர் உயிரி ழந்தார்.
வரலாற்றில் பதிந்த ஒரு வாழ்க்கை
தமிழ்ச்செல்வனின் வாழ்க்கை, இலங்கை உள்நாட்டு போரின் இராணுவ மற்றும் அரசியல் பரிமாணங்கள் ஒன்றோடு ஒன்று எவ்வாறு பின்னி பிணைந்திருந்தன? என்பதை எடுத்து காட்டுகிறது.
போர் களத்தில் காயமடைந்தவர் பின்னர் சர்வதேச பேச்சுவார்த்தைகளில் முக்கிய பிரதிநிதியாக மாறினார். ஆங்கிலம் பேசாதவராக இருந்தபோதிலும் வெளிநாட்டு ஊடகங்களுடன் தொடர்பு கொண்டார்.
அவரது வாழ்க்கையை பற்றிய இந்த தகவல்கள், இலங்கை போரின் வரலாற்றை அறிந்து கொள்வதற்கு மட்டுமல்லாமல், அந்த காலகட்டத்தின் அரசியல் தலைமைத்துவம் எவ்வாறு செயல்பட்டது? என்பதை புரிந்து கொள்வதற்கும் உதவுகின்றன.
