முடங்கியுள்ள ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான நிலையான உடன்பாடு 2027-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் எட்டப்படலாம் என ஃபிட்ச் ரேட்டிங்ஸ் கணித்துள்ளது. இனடிப்படையில் வளைகுடா நாடுகள் மோதலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும், உயர்ந்த கச்சா எண்ணெய் விலைகள் மற்றும் நிதியிருப்பு காரணமாக அந்நாடுகளின் கடன் தரவரிசை வீழ்ச்சியடையாமல் உறுதியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
