தேசிய மட்டப் போட்டிகளில் வரலாற்றுச் சாதனை படைத்த யாழ். தெல்லிப்பழை யூனியன் கல்லூரி சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும், இன்று சிறப்பாக இடம்பெற்றது.
இலங்கைத் தேசிய மட்டத் தமிழ்த்தின வில்லிசைப் போட்டியில் முதலாம் இடத்தையும், உதைபந்தாட்டப் போட்டியில் இரண்டாம் இடத்தையும், தேசிய மட்ட உற்பத்தித் திறன் (Productivity) போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
இந்த வரலாற்றுச் சாதனைக்குப் பின்னால் உழைத்த அதிபர், ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் மற்றும் மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நோக்கில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இன்று காலை மருதனார்மடம் சந்தியிலிருந்து பான்ட் வாத்திய அணிவகுப்புடன் ஆரம்பமான இச்சிறப்பு ஊர்வலம், கே.கே.எஸ்.வீதி ஊடாக சென்று யூனியன் கல்லூரி மண்டபத்தைச் சென்றடைந்தது.
கல்லூரி அதிபர் தில்லையம்பலம் வரதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பி. ஜெயகரன், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
