யாழ்ப்பாணம் , தையிட்டி பகுதியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரைக்கு சிங்கள கடும் போக்குவாதிகள் சிலர் வந்து தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடும் போக்குவாத மூன்று சிங்கள அமைப்புகளின் பிரதிநிதிகள் என அடையாளப்படுத்தப்பட்டவர்கள் தங்கியுள்ளதாக பொலிஸ் தகவல்கள் ஊடாக அறிய முடிகிறது.
Tourist Destinations
விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான பவானி வீதி காணப்படும் நிலையில் குறித்த வீதியை கடந்த 11ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்குமாறு பிரதேச சபை விகாரதிபதிக்கு அறிவித்து இருந்தது. அதன் காலக்கெடு முடிவடைந்த நிலையில் , பிரதேச சபையினால் வீதியை மீட்கும் முயற்சி எடுக்கப்படும் என்ற நிலையே சிங்கள அமைப்புக்களை சேர்ந்தவர்கள் வந்து தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை , வீதியை மீட்கும் முயற்சி , இன நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் , சமாதான சீர்குழைவை ஏற்படுத்தும் ஆகவே அதனை நிறுத்த நீதிமன்று தடையுத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளனர்
குறித்த வழக்கு மீதான விசாரணை கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற போது, எதிர்வரும் 21ஆம் திகதி கட்டளை பிறப்பிக்கப்படும் என மன்று திகதியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
