அனைத்து வழித்தடங்களிலும் பயணிகள் தொடருந்துகளை யாசகர்களும் பல்வேறு வியாபாரிகளும் ஆக்கிரமிப்பதால் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது தொடருந்துகளில் வியாபாரம் செய்வதும் பிச்சை எடுப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது, ஆனால் இந்தச் செயல்களைத் தடுக்க தொடருந்து திணைக்களத்தின் சம்பந்தப்பட்ட பிரிவுகள் தீவிரமாகச் செயல்படவில்லை என்று பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
