அடுத்த 36 மணித்தியாலங்களில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குத் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (09-10-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
