போப் லியோ XIV அவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.
போப் லியோவின் வலது நுரையீரலின் கீழ்ப்பகுதியில் இருந்த கட்டியை அகற்றுவதற்காகச் செவ்வாய்க்கிழமை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.
பைபிள் வாசி
அறுவை சிகிச்சையின்போது, நுரையீரல் புற்றுநோயின் பொதுவான வகைகளில் ஒன்றான அடினோகார்சினோமா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, போப்பின் வலது நுரையீரலின் கீழ்ப்பகுதி அகற்றப்பட்டது.
ரோமில் உள்ள புகழ்பெற்ற ஜெமெல்லி மருத்துவமனையில் இந்தச் சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு போப் லியோ இயல்பாகக் கண்விழித்ததாகவும், அவர் குணமடைய சுமார் ஒரு வாரம் தேவைப்படும் என்றும் வத்திக்கான் தெரிவித்துள்ளது.
புற்றுநோய் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டிருந்தால் குணமடைவதற்கான வாய்ப்பு சிறப்பாக இருக்கும் எனப் புற்றுநோய் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், நோய் வேறு பகுதிகளுக்குப் பரவியுள்ளதா என்பதைக் கண்டறிய மேலதிக மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.
போப் லியோ விரைவில் முழுமையாகக் குணமடைய வேண்டும் என உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
