பிரித்தானியாவிலுள்ள அமெரிக்க விமானப் படைத்தளத்தை இலக்கு வைத்துச் சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் இச்சதித்திட்டம் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினால் (IRGC) வழிநடத்தப்பட்டதாகப் பிரித்தானியப் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தெரிவித்துள்ள நிலையில், பயங்கரவாத எதிர்ப்பு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
