காலிக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் சிக்கியுள்ள வணிகக் கப்பல்களில் இருந்த 40 ஈரானிய மாலுமிகள், சிறிலங்கா கடற்படையினரால் கரைக்கு கொண்டு வரப்பட்டு ஈரானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நேற்றுக்காலை 40 ஈரானிய மாலுமிகளும் சிறிலங்கா கடற்படையின் இரண்டு படகுகள் மூலம் கரைக்கு கொண்டு வரப்பட்டு, கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், இன்று காலை ஈரானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
