அமெரிக்கா ஈரானின் நிபந்தனைகளை உத்தியோகபூர்வமாக ஏற்கும் வரை உலகளாவிய கடல்சார் வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடியே இருக்கும் என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். முன்வைக்கப்பட்ட திட்டத்தில் மேலதிக நிபந்தனைகளைச் சேர்க்க அமெரிக்கா முயல்வதாகச் சுட்டிக்காட்டிய அவர், உடன்பாடு வரை நீரிணை மூடியிருக்கும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
