பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியில், விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் வகையில் அர்ச்சுனா சில கருத்துகளை வெளியிட்டதாக சர்ச்சை எழுந்திருந்தது.
இதையடுத்து, குறித்த கருத்துகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் அர்ச்சுனாவுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
