பராக் ஒபாமாவை விட தன்னால் ஒரு சிறந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த முடியும் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுப்பதே , பிப்ரவரி 28 அன்று இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா எடுத்த முடிவின்முக்கியக் காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார் . தற்போது போர் நிறுத்தம் அமலில் உள்ளது, மேலும் இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் விரைவில் மீண்டும் தொடங்கக்கூடும்.
தற்காப்பு கலை பயிற்சி
பத்து ஆண்டுகளுக்கு முன்பு, வாஷிங்டனும் தெஹ்ரானும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சமரசத்தை எட்டின. 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தமானது, அதிகாரப்பூர்வமாக கூட்டு விரிவான செயல் திட்டம் (JCPOA) என்று அழைக்கப்பட்டது. இது பொருளாதாரத் தடைகளில் இருந்து நிவாரணம் பெறுவதற்கு ஈடாக ஈரானின் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டது. 2018-ல் அமெரிக்கா அதிலிருந்து விலகிய பின்னர் அந்த ஒப்பந்தம் முறிந்துபோனது.
தனது முதல் பதவிக்காலத்தில் அமெரிக்காவை இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேற்றிய டிரம்ப், அதிபர் பராக் ஒபாமாவின் கீழ் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதை விட ஒரு சிறந்த ஒப்பந்தத்தை தன்னால் பெற முடியும் என்று மீண்டும் மீண்டும் வாதிட்டு வருகிறார்.
ஒரு புதிய ஒப்பந்தம் யதார்த்தமாக மேலும் முன்னேற முடியுமா? அல்லது 2015-ஆம் ஆண்டை விட இன்றைய இராஜதந்திரம் மிகவும் மோசமான சூழ்நிலைகளில் செயல்படுகிறதா என்பதே இன்றைய கேள்வி.
தற்போதைய முக்கிய சர்ச்சை காலத்தைப் பற்றியது. ஈரானின் அணுசக்தி நடவடிக்கைகளை 20 ஆண்டுகளுக்கு இடைநிறுத்த வேண்டும் என அமெரிக்கா கோருகிறது, ஆனால் ஈரானோ ஐந்து ஆண்டுகள் வரையிலான கட்டுப்பாடுகளை மட்டுமே ஏற்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது.
மற்ற முக்கிய கேள்விகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. ஈரானின் அணுசக்தி நிலையங்களை யார் கண்காணிப்பார்கள்? அதன் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்புக்கு என்னவாகும்? மேலும், ஈரான் எத்தனை சென்ட்ரிஃபியூஜ்களை வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படும் என்பறை தெளிவற்றவையாக உள்ளன.