கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தருமபுரம் பகுதியில் இருந்து அனுமதி பத்திரங்கள் எதுவும் இல்லாமல் மணல் கொண்டு சென்ற நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். நோக்கி சென்ற டிப்பர் ரக வாகனம் ஊடாக பரந்தன் பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவது தொடர்பாக பிரதேசவாசிகள் மாவட்ட குற்ற தடுப்பு பொலிஸாருக்கு முறைப்பாடு அளித்துள்ளனர்.
குறித்த முறைப்பாட்டிற்கு அமைய நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
