கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போது, 454 மில்லியன் ரூபா மதிப்புள்ள கொக்கெய்ன் மற்றும் எக்ஸ்டசி போதைப்பொருட்களுடன் இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யபட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை இன்று (28.10.2026) இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட நபர் 46 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
