ஜெர்மனியை நோக்கி சிறகடிக்கும் காரைதீவின் இளம் நட்சத்திரம்! இலங்கை அளவில் சாதித்து அசத்திய யாசண்முகா மகா வித்தியாலய மாணவன் ஜஸ்விகன்!
இலங்கையின் 25 மாவட்டங்களிலிருந்தும் போட்டியிட்ட ஆயிரக்கணக்கான மாணவர்களிலிருந்து வெறும் மூன்றே மூன்று மாணவர்கள் மட்டுமே அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை எட்டியுள்ளனர்!
அதில் ஒருவராகத் தெரிவாகி, காரைதீவு மண்ணுக்கும்
க/ சண்முகா
மகா வித்தியாலயத்திற்கும் அளப்பரிய பெருமை சேர்த்துள்ளார் மாணவன் ஜஸ்விகன்!
பொறியியலாளர் சுரேந்திரகுமார் – நாகநந்தினி தம்பதியரின் சிரேஷ்ட புதல்வனான ஜஸ்விகன், Sri Lanka Unites (SLU) Leadership Programme அமைப்பினால் நடத்தப்பட்ட சர்வதேச தலைமைத்துவத் தெரிவில் பதிலளித்து ,
தனது திறமையால் இந்த உன்னத நிலையை அடைந்துள்ளார்.
இந்த அரிய வாய்ப்பின் மூலம், இலங்கையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 3 இளம் தலைவர்களில் ஒருவராக ஜஸ்விகன் நாளை ஜெர்மனி நாட்டுக்கு (Germany) அதிகாரப்பூர்வ விஜயம் செய்யவுள்ளார்!
சர்வதேச ரீதியிலான புதிய அனுபவங்கள், நவீன அறிவியல் நுணுக்கங்கள் மற்றும் தலைமைத்துவப் பயிற்சிகளைப் பெற்றுத் தாயகம் திரும்பவுள்ள இளம் சாதனையாளருக்குச் சமூகத்தின் அனைத்துத் தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் ..
“பாடசாலைக்கும், பெற்றோர் மற்றும் காரைதீவு மண்ணுக்கும் உலகளவில் பெருமை தேடித்தந்துள்ள மாணவன் ஜஸ்விகனின் எதிர்கால சாதனைகளும் வெற்றிப்பயணமும் மென்மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்!”
நன்றி மூலத் தகவல் மகேந்திரன்
