இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து வாக்குகளும் எண்ணி முடிக்கப்பட்ட பின்னரும், இறுதி ஆசனப் பகிர்வில் மாற்றம் ஏற்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணி 53 ஆசனங்களையும், எதிர்க்கட்சிக் கூட்டணி 48 ஆசனங்களையும், அரபுக் கட்சிகள் 19 ஆசனங்களையும் பெற்றுள்ளன.
