முல்லைத்தீவு, புதுமாத்தளன் பகுதியிலிருந்து படகில் தொழிலுக்காகக் கடலுக்குச் சென்று காணாமல்போன மூன்று மீனவர்களைத் தேடும் நடவடிக்கை இன்றைய தினமும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்ரோபர் 26 ஆம் திகதி திங்கட்கிழமை காலை ‘படகில் தொழிலுக்காகக் கடலுக்குச் சென்ற மீனவர்களே காணாமல்போயுள்ளனர்.
அன்ரனிஜூட் (புதுமாத்தளன்) ,சிறீபுஸ்;பராசா (யாழ்ப்பாணம்) , மொஹமட் ரிஸ்வான் (மன்னார்) ஆகியோரே காணாமலட போயுள்ளனர்.
காணாமல்போன மீனவர்களையும் அவர்களது படகையும் கண்டறிவதற்காக ஏனைய மீனவர்கள் 8 படகுகளில் கடலுக்குச் சென்று விரிவான தேடுதலில் ஈடுபட்டபோதிலும், எவ்வித தகவலும் கிடைக்காத நிலையில், மாலை அவர்கள் மீண்டும் கரை திரும்பியிருந்தனர்.
புயல் காரணமாகக் கடலில் நிலவிய பலத்த காற்று மற்றும் தீவிர கொந்தளிப்பு நிலை காரணமாக, படகு இலங்கையின் கடல் எல்லையைத் தாண்டி அயல்நாடுகளின் கடற்பரப்பிற்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
