உலகைச் சுற்றும் பயணத்தில் ஈடுபட்டிருந்த அமெரிக்க சொகுசுக் கப்பலொன்று, எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் நிதி நெருக்கடி காரணமாக கம்போடியாவின் சிஹானோக்வில் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த “வில்லா வி ரெசிடன்சஸ்” நிறுவனத்துக்குச் சொந்தமான எம்.வி. ஒடிஸி (MV Odyssey) என்ற கப்பலே இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளது.
