யாழ்ப்பாணம் சங்குவேலிப் பகுதியில் சுவிஸ் நாட்டில் இருந்து வந்தவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புபட்டதான இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
City & Local Guides
இரு மாதங்களின் முன்பு சுவிஸ் நாட்டில் இருந்து வந்து சங்குவேலியில் தங்கியிருந்த 67 வயது முதியவரே ஒருவர் கொலை செய்யப்பட்டு உடமைகள் கொல்லையடிக்கப்பட்டது.
முதியவர் தங்கியிருந்த வீட்டின் புகை கூட்டின் ஊடாக உட் புகுந்த கொள்ளையர்கள் சுவிசில் இருந்து வந்தவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலிகள் உள்பட 30 பவுண் நகை மற்றும் 4 லட்சம் ரூபா ரொக்கப் பணம் என்பவற்றை கொள்ளையிட்டுச் சென்றனர்.
இக்கொள்ளையின்போது முகத்தை துணிகளால் மூடிக் கட்டியபடி வீட்டின் உள்ளே புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் பொருத்தியிருந்த கமராக்களை அடித்து நொருக்கிய பின்பு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
கொள்ளையடித்த வீட்டில் இடம்பெற்ற கொலையின் தடயங்களை கையுறை அணிந்து அழித்ததோடு அங்கிருந்து வெளியேறிய சமயம் மோப்ப நாய் சுவடு பிடித்து விடக்கூடாது என்பதற்காக பெருமளவு மிளகாய் தூள்களை தூவி திசை திருப்பி யிருந்தனர்.
மே மாதம் 14 ஆம் திகதி இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் இன்று அதிகாலை இரு சந்தேக நபர்களை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளதோடு கொள்ளையிடபட்ட தங்க நகையின் ஒரு பகுதியினையும் மீட்டுள்ளனர்.
