இலங்கையின் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேச தரத்திலான சுயாதீன விசாரணைகளை உறுதிப்படுத்த பின்லாந்து அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து அந்நாட்டு எம்.பி.க்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். இந்தநிலையில் 580 இற்கும் மேற்பட்ட உடல்கள் தோண்டப்பட்டுள்ள சூழலில், தடயவியல்-டி.என்.ஏ உதவிகளை வழங்க பின்லாந்து தயாராக உள்ளதா எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
