பாகிஸ்தானில் புதிய பேச்சுவார்த்தைகள் நடைபெறலாம் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஈரானுடன் பாகிஸ்தானில் இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து அமெரிக்கா ஆலோசித்து வருவதாக வெள்ளை மாளிகை நேற்றுப் புதன்கிழமை தெரிவித்தது.
அந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. மேலும் ஒரு ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்று பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் பேச்சுவார்த்தைகள் இஸ்லாமாபாத்தில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம் என்று அவர் கூறினார்.
பல தசாப்தங்களுக்குப் பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே நடைபெறும் முதல் உயர்மட்ட நேரடி இராஜதந்திர சந்திப்பாக, அமெரிக்க மற்றும் ஈரானிய தூதுக்குழுக்களுக்கு இடையேயான முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் தலைநகரம் கடந்த வார இறுதியில் நடத்தியது.