ஜெர்மனி தலைநகர் பெர்லினில் ‘பெருமிதப் பேரணி’ (Marche des fiertés) முடிந்து திரும்பிய அப்பாவி மக்கள் மீது சரக்கு வாகனத்தை ஏற்றியும், கொடிய ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கியும் வெறியாட்டம் நடத்திய முக்கியக் குற்றவாளி, காவல்துறையினரின் அதிரடித் தாக்குதலில் இன்று சுட்டுக் கொல்லப்பட்டார்!
இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை பெர்லினின் ‘ஸ்பாண்டாவ்’ பகுதியில் காவல்துறையினர் மாபெரும் தேடுதல் வேட்டையை (Opération importante) முன்னெடுத்தனர். இந்த அதிரடி நடவடிக்கையின் முடிவிலேயே, தாக்குதலை நடத்திய லெபனான் பூர்வீகத்தைக் கொண்ட அந்த ஜெர்மன் இளைஞன் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற அதிரடியான தகவலை மத்திய உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் டோப்ரிண்ட் (Alexander Dobrindt) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட உள்துறை அமைச்சர், “இங்குள்ள தடயங்கள் மற்றும் தாக்குதலின் தன்மையைப் பார்க்கும்போது, இது முழுக்க முழுக்கத் திட்டமிடப்பட்ட ஒரு ‘இஸ்லாமிய தீவிரவாதத் தாக்குதல்’ என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை,” எனத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
சனிக்கிழமையன்று அரங்கேறிய இந்த அதிர்ச்சியூட்டும் வெறிச்செயலில், ஒரு பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்; மேலும் 29 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மூவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்த நிலையில், தற்போது யாருக்கும் எவ்வித உயிர் ஆபத்தும் இல்லை (Danger de mort) என்ற சற்று ஆறுதலான செய்தியை ஜெர்மன் அதிபர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) தெரிவித்துள்ளார். இன்று பெர்லினில் உள்ள செயின்ட் மேரி (Sainte-Marie) தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு அஞ்சலிக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் இந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டார்.
தாக்குதல் நடந்த டியர்கார்டன் (Tiergarten) பூங்காப் பகுதியில், உயிரிழந்த பெண்ணுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதற்காகப் பல்லாயிரக்கணக்கான மக்கள் மெழுகுவர்த்திகளுடனும் கண்ணீருடனும் ஒன்றுகூடியுள்ளனர். சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்க முயன்ற தீவிரவாதம், சில மணி நேரங்களிலேயே வேரறுக்கப்பட்டிருப்பது பெர்லின் மக்களிடையே சற்றே நிம்மதியைக் கொடுத்துள்ளது.
Weniger anzeigen
