மட்டக்களப்பு திமிலைதீவில் விபத்தில் உயிரிழந்த ஆசிரியை மதிவதனியின் மரணத்திற்கு நீதி கோரியும் மற்றும் பாடசாலை மாணவர்கள்-ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தியும் வவுணதீவு பிரதேச செயலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு மணல் அகழ்வு மற்றும் கனரக வாகனப் போக்குவரத்தை முறைப்படுத்தக் கோரி வவுணதீவு பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
