மாத்தறையின் பிரவுன்ஸ் ஹில் பகுதியில் நடைபெற்ற நில மோசடி தொடர்பான பணச்சலவை வழக்கில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை உடனடியாகக் கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்தது .
இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கில் சந்தேக நபரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால், இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது என சந்தேகிக்கப்படும், மாத்தறையின் பிரவுன்ஸ் ஹில் பகுதியில் உள்ள ஒன்றரை ஏக்கர் தென்னந்தோப்பை 14 நாட்களுக்கு முடக்கி, மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றம் 6ஆம் தேதியன்று ஒரு தடை உத்தரவையும் பிறப்பித்தது.
இவ்விவகாரம் தொடர்பாக காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மனுக்களைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
