முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகனான அனுத ஜினதித் சமரகோன் பண்டார உட்பட நான்கு சந்தேகநபர்களை பிணையில் விடுவித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமை உள்ளிட்ட பல கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையிலேயே நீதிமன்றம் அவர்களுக்கு இந்த பிணை அனுமதியை வழங்கியுள்ளது.
