மொரட்டுவை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தையடுத்து மற்றுமொரு துப்பாக்கி சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது. பிலியந்தலை, சுவரபொல பகுதியில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது. மொரட்டுவை விடுதி உரிமையாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்காக வந்தவர்களாலேயே இந்த சம்பவமும் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
