அம்பாறை மாவட்டம் மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று (13) ஞாயிற்றுக்கிழமை கரையொதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சடலம் கரையொதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காரைதீவு காவல்துறையினர், சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பிலும் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
சடலம் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகளை காரைதீவு காவல்துறையினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
