ஈராக்கில் அமெரிக்கா மற்றும் சவுதி இணைந்து ஏழு மாகாணங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 20 போராளிகள் கொல்லப்பட்டனர். மோலம் 32 பேர் காயமடைந்தனர். இதற்கு ஈராக்கின் மக்கள் திரட்டல் படைகள் (Iraq’s Popular Mobilisation Forces) கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், படைகள் முழு எச்சரிக்கை நிலையில் உள்ளன என்றும் எச்சரித்துள்ளன.
மக்கள் திரட்டல் படைகளின் ஒரு ஆயுதக் குழுவான ஹரகாத் அல்-நுஜாபா, பாதுகாப்பான ஈராக் நகரங்கள் மீதான அமெரிக்க-சவுதி தாக்குதல்களைக் கண்டித்ததோடு, கொல்லப்பட்டவர்களுக்குப் பழிவாங்கப்படும் என்றும் கூறியுள்ளது.
Geographic Reference
அமெரிக்கப் படைகளின் தொடர்ச்சியான இருப்பு நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு உடனடி அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்று கூறி, அவர்களை நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என அது கோரிக்கை விடுத்துள்ளது.
சவூதி அரேபியாவுடனான ஒத்துழைப்பை முடிவுக்குக் கொண்டுவரவும், மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளை நிலைநிறுத்தவும் அழைப்பு விடுத்ததுடன், அமெரிக்க மற்றும் சவூதி நலன்களுக்கு எதிராகப் பதிலடித் தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அச்சுறுத்தியது.
நாடு முழுவதும் உள்ள தங்களது தளங்கள் மீது சவூதி-அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதல்களில், ஈராக்கின் மக்கள் திரட்டல் படையைச் சேர்ந்த குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டதாகவும், 32 பேர் காயமடைந்ததாகவும் அப்படை தெரிவித்துள்ளது.
ஈராக் பிரதமர் அலி அல்-ஜைதியின் நாளைய சவூதி அரேபியா பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கும், பாதுகாப்பு ஒருங்கிணைப்பு மற்றும் பிராந்திய முன்னேற்றங்கள் குறித்து விவாதிப்பதற்கும் அல்-ஜைதி உத்தியோகபூர்வ பயணமாக சவூதி அரேபியாவுக்குச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
