இலங்கையின் மிகப்பெரிய தந்த யானைகளில் ஒன்றான காவந்திஸ்ஸ யானை நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளது. காலில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயத்திற்குச் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், உணவு உட்கொள்ளாமல் பலவீனமடைந்திருந்த யானை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்து இறந்துள்ளது. கல்கமுவ பகுதியில் வாழ்ந்த இந்த யானையின் இழப்புப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
