முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விமானத்திற்கு ஏவுகணை தாக்குதல் நடத்தினால் ஆட்சியை மாற்றலாம் என ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கூறியதாக நீதிமன்றில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றில் நடைபெற்றபோதே, முறைப்பாட்டுத் தரப்புச் சாட்சியான சுமதிபால சுரேஷ்குமார் இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
