திருகோணமலையிலிருந்து வடகிழக்குத் திசையில் சுமார் 270 கிலோமீற்றர் தொலைவில் காணப்படும் காற்றுச் சுழற்சி, இன்று இரவு மேலும் வடகிழக்குத் திசையில் நகர்ந்து இலங்கையின் செல்வாக்கிலிருந்து விலகிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளிலும் நிலவிய கனமழையுடனான சீரற்ற வானிலை, நாளை (27) அதிகாலை முதல் படிப்படியாக வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
