களுத்துறை நாகொடாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு பகுதியில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வாழைச்சேனை காவல்துறை பிரிவிலுள்ள நாவலடி பகுதியில் பேருந்து ஒன்றில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை (09) இரவு விசேட அதிரடிப்படையினர் குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
